சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்.. சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து..!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்.. சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து..!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்.. சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து..!
X

சிங்கப்பூரில் ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடந்த அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை சயனா கவாகமி ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து 21-15, 21-7 என்ற செட் கணக்கில் சயனா கவாகமியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இந்நிலையில், சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், சீன வீராங்கனை வாங் ஷியை வீழ்த்தி பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

சீனாவின் வாங் ஷியை 21-9, 11-21, 21-15 என்ற புள்ளிகள் கணக்கில் பி.வி.சிந்து வீழ்த்தினார். சர்வதேச அளவிலான WTA 500 தொடர்களில் பி.வி.சிந்து முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:
Next Story
Share it