Theme Check

பாட்டு போட்டதால் ஆத்திரம்… இளைஞர் அடித்துக் கொலை!!

பாட்டு போட்டதால் ஆத்திரம்… இளைஞர் அடித்துக் கொலை!!

பாட்டு போட்டதால் ஆத்திரம்… இளைஞர் அடித்துக் கொலை!!
X

திருமண விழாவின் போது பாட்டு போடுவதில் ஏற்பட்ட தகராறில் 23 வயது இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட இந்தியாவில் திருமண நிகழ்ச்சியின் போது பாட்டு, கச்சேரி, நடனம் என கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள். ஆனால் அண்மை காலங்களாக அம்மாதிரியான திருமண கொண்டாட்டங்களின் போது பல அசம்பாவிதங்கள் நடைபெறுவதும் வழக்கமாகி விட்டது.

அதன்படி, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் கேரியில் நடந்த திருமணத்தின் போது பாட்டு போடுவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

murder 1

கமாரியா என்ற கிராமத்தில் விவசாயி மகளின் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த DJவிடம் ஒரே பாடலை மீண்டும் மீண்டும் ஒலிபரப்பச் சொல்லி விருந்தினர் ஒருவர் கேட்டிருக்கிறார்.

இது பிற விருந்தினர்களிடையே சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் சிலர் அதற்கு எதிர்ப்பும் தெரிவித்தனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

attack

இந்நிலையில் அவர்களை சமாதானம் செய்ய முற்பட்ட வீரு லால் என்ற 23 வயது இளைஞன் அந்த தகராறின் போது கட்டையால் தாக்கப்பட்டார். இதனால் சுயநினைவை இழந்த அந்த இளைஞர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it