பிரின்ஸ் ஆகிறார் சிவகார்த்திகேயன்..!!

பிரின்ஸ் ஆகிறார் சிவகார்த்திகேயன்..!!

பிரின்ஸ் ஆகிறார் சிவகார்த்திகேயன்..!!
X

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘டான்’ திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில், அவரது அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ‘பிரின்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த படத்தில் கதாநாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார்.முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்து வருகிறார்.தெலுங்கு திரைப்படமான ‘ஜாதி ரத்னாலு’ படத்தின் இயக்குநர் அனுதீப் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். ஃபேமிலி என்டர்டெயினராக இந்தப் படம் வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 'எஸ்.கே 20' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய கொடியையும் இங்கிலாந்து கொடியையும் குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார். 'ப்ரின்ஸ்' என தலைப்பு வைக்கப்பட்டு வெளியாகியிருக்கும் இந்த போஸ்டரில், சிவகார்த்திகேயனின் ஒரு கையில் உலக உருண்டையும் மறு கையில் புறாவை பறக்கவிடுவது போலவும் இருக்கிறார்.


Tags:
Next Story
Share it