சிவகார்த்திகேயனின் புதிய படம்.. பூஜையுடன் இன்று தொடங்கியது..!
சிவகார்த்திகேயனின் புதிய படம்.. பூஜையுடன் இன்று தொடங்கியது..!

சிவகார்த்திகேயன் அடுத்தாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘டாக்டர்’. இதையடுத்து சிவகார்த்திகேயன் ‘டான்’, ‘அயலான்’ போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இந்தப் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குந்ர் அனுதீப் இயக்குகிறார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தற்காலிகமாக ‘எஸ்.கே 20’ என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது.
Next Story

