Theme Check

சமூக நீதி நிலைநாட்டப்படும்.. பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி..!

சமூக நீதி நிலைநாட்டப்படும்.. பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி..!

சமூக நீதி நிலைநாட்டப்படும்.. பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி..!
X

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது போன்று அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இதுதொடர்பான விசாரணை முடிந்ததை தொடர்ந்து, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதி முயற்சிக்கு அளித்துள்ள சிறப்பான அங்கீகாரம். நாட்டுக்கே வழிகாட்டும் சமூக கடமையை தமிழக அரசு தொடர்ந்து செய்யும்.

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு வழக்கில் மூத்த வழக்கறிஞரை வைத்து தமிழக அரசு வாதாடியது. சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் அவசர அவசரமாக ஒதுக்கீடு அறிவித்தனர்.

வன்னியர் இட ஒதுக்கீடு ரத்தானது பற்றி முதலமைச்சர் விளக்கமளித்தார். இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி, 7.5% இட ஒதுக்கீட்டை போல 10.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் நிச்சயம் சமூக நீதி நிலைநாட்டப்படும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

Next Story
Share it