Theme Check

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை 2 கி.மீ தூரம் தோளில் சுமந்து சென்ற வீரர்கள்...!! குவியும் பாராட்டுக்கள்

X

சத்தீஸ்கரில் பிரசவ வேதனையில் துடித்த ஒரு கர்ப்பிணி பெண்ணை பாதுகாப்பு படை வீரர்கள் தங்கள் தோள்களில் சுமந்து கொண்டு போய் பத்திரமாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

சம்பவத்தன்று, பர்கம் பகுதிக்கு அருகே மாவட்ட ரிசர்வ் காவலர் படை வீரர்கள் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் பிரசவ வேதனையில் துடித்த ஒரு கர்ப்பிணி பெண்ணை, குடும்ப உறுப்பினர்கள் சிரமத்துடன் என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடுவதை கண்டனர்.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய சூழலில் அந்த கர்ப்பிணிப் பெண் இருப்பதை அவர்கள் பார்த்தார்கள்.

உடனே, அவர்கள் விரைவாக செயலில் இறங்கி, கட்டிலை ஸ்ட்ரெச்சராக மாற்றி, அந்த பெண்ணை கட்டிலுடன் தங்கள் தோளில் சுமந்தனர். அந்தப் பெண்ணை தோளில் சுமந்துகொண்டு இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து தங்கள் ரோந்து வாகனத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அந்த பெண்ணை, பால்னார் சுகாதார மையத்திற்கு காரில் அழைத்து சென்றனர்.அங்கு அந்த பெண்ணுக்கு ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது.

பிரசவ வேதனையில் துடித்த கர்ப்பிணி பெண்ணை ஒரு கையில் மறுகையில் துப்பாக்கியுடன் 2 கி.மீ தூரம் தோளில் சுமந்து சென்ற வீரர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்..

Next Story
Share it