3 பாடத்தில் மகன் பெயில்.. மனமுடைந்த தந்தை தற்கொலை..!
3 பாடத்தில் மகன் பெயில்.. மனமுடைந்த தந்தை தற்கொலை..!

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள கல்பாவி தொட்டிப் பாளையத்தை சேர்ந்தவர் அப்புசாமி (45). இவருடைய மனைவி சுமதி(38).
அப்புசாமி சொந்தமாக ஆம்னி வேன் ஓட்டி வருகிறார். சுமதி பவானி அருகே உள்ள தனியார் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சஞ்சய்(15) மற்றும் சந்துரு(13) என்ற இரு மகன்கள் உள்ளனர்.
சஞ்சய், மயிலம்பாடியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற 10-ம் வகுப்பு தேர்வு எழுதினார். தேர்வு முடிவில், 3 பாடத்தில் தோல்வி அடைந்ததால் அவரது தந்தை சஞ்சயை டுட்டோரியல் காலேஜில் சேர்த்துவிட்டு உள்ளார்.
ஆனால், சஞ்சய் வகுப்புக்கு செல்ல மறுத்ததால் அப்புசாமி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை அப்புசாமி குடித்து விட்டார்.
வயிற்று வலியால் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிகிச்சையில் இருந்த அப்புசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

