தங்கம் வென்ற பிரபல நடிகரின் மகன்..!! குவியும் வாழ்த்துக்கள்..!!
தங்கம் வென்ற பிரபல நடிகரின் மகன்..!! குவியும் வாழ்த்துக்கள்..!!

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், நீச்சல் வீரராக உள்ளார். அவர் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்கவுள்ளார். இந்நிலையில் புவனேஸ்வரில் நடைபெறும் 48-வது ஜீனியர் நேஷனர் சாம்பியன்ஷிப் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் பங்கேற்றார். இப்போட்டியில் அவர் தேசிய சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார்.
கலிங்கா அரங்கத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 1500 மீ ப்ரீஸ்டைல் போட்டியில் 16:01.73 விநாடிகளில் தூரத்தை கடந்து தங்கம் வென்றார் வேதாந்த். இதற்கு முன்பு இதே போன்ற 1500 மீ ப்ரீஸ்டைல் போட்டியில் 16:06.43 என இருந்த தேசிய சாதனையை தற்போது அவர் முறியடித்துள்ளார்.
வேதாந்தின் இந்த வெற்றியை மாதவன் ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் நடிகர் மாதவன்
Never say never . 🙏🙏🙏❤️❤️🤗🤗 National Junior Record for 1500m freestyle broken. ❤️❤️🙏🙏@VedaantMadhavan pic.twitter.com/Vx6R2PDfwc
— Ranganathan Madhavan (@ActorMadhavan) July 17, 2022