Theme Check

விரைவில் பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை ரூ.125?

விரைவில் பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை ரூ.125?

விரைவில் பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை ரூ.125?
X

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன.

ஆனால் சென்னையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து வருகிறது. காரணம் ஐந்து மாநில தேர்தல் காரணமாக பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை.

நேற்றுடன் வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இன்றும் விலை உயரவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 130 டாலரை கடந்துவிட்டது.

petrol

2012 ஆம் ஆண்டிற்குப் பின் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது இதுவே முதல் முறையாகும். இதன்காரணமாக,இனி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.23 வரை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. அதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் 125 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it