தென்மாவட்ட பயணிகள் ஷாக்.. ரயில் சேவையில் திடீர் மாற்றம் !!
தென்மாவட்ட பயணிகள் ஷாக்.. ரயில் சேவையில் திடீர் மாற்றம் !!

தென்மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய ரயில்களின் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தென்மாவட்ட ரயில் பயணிகளின் வசதிக்காக நாகர்கோவில்-பெங்களூரு - நாகர்கோவில் விரைவு ரயில் பெங்களூரு அருகே உள்ள கார்மேலாரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
அதன்படி பெங்களூரு-நாகர்கோவில் விரைவு ரயில் (17235) மற்றும் நாகர்கோவில்-பெங்களூரு விரைவு ரயில் (17236) ஆகியவை கார்மேலாரம் ரயில் நிலையத்திற்கு மாலை 5.39 மற்றும் காலை 7.29 மணிக்கு வந்து சேர்ந்து மாலை 5.40 மற்றும் காலை 7.30 மணிக்கு புறப்படும். இந்த வசதி ஏப்ரல் 15 முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை 6 மாதத்திற்கு பரிசோதனையின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் தென் மாவட்ட பயணிகள் போக்குவரத்து நெருக்கடி நிறைந்த பெங்களூரு சென்று சுற்றிவர வேண்டியது தவிர்க்கப்படும்.

அதேப்போல் திருநெல்வேலி-நாகர்கோவில் பிரிவில் வள்ளியூர்-ஆரல்வாய்மொழி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு வேலை நடக்க இருக்கிறது.
எனவே இந்த பகுதியில் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில் (22627/22628) ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 29ம் தேதி வரை திருநெல்வேலி - திருவனந்தபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. ஏப்ரல் 29ம் தேதி நாகர்கோவிலில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வாராந்திர விரைவு ரயில் திருநெல்வேலி - நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், ஏப்ரல் 29ம் தேதி கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் விரைவு ரயில் (12634) கன்னியாகுமரியில் இருந்து 45 நிமிடம் காலதாமதமாக மாலை 5.50 மணிக்கு புறப்படும், இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
newstm.in

