Theme Check

தமிழை இப்படி பேசுங்க.. ஐகோர்ட் நீதிபதி வலியுறுத்தல்..!

தமிழை இப்படி பேசுங்க.. ஐகோர்ட் நீதிபதி வலியுறுத்தல்..!

தமிழை இப்படி பேசுங்க.. ஐகோர்ட் நீதிபதி வலியுறுத்தல்..!
X

சென்னையில் நேற்று, ‘புதுகைத் தென்றல்’ இதழுக்கான பாராட்டு விழா, அதன் ஆசிரியர் புதுகை மு.தருமராசனின் 80-வது வயது தொடக்க விழா, கவிதை நூல் வெளியீடு ஆகிய 3 விழாக்கள் நடந்தது.

இந்நிகழ்வில், உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: “இன்றளவில் தொழில்நுட்பம் பெருகினாலும் ‘புதுகைத் தென்றல்’ போன்ற சிற்றிதழ்கள் ஆற்றுகின்ற தமிழ் வளர்ச்சிப் பணிகள் பாராட்டத்தக்கவை. அதன் ஆசிரியருக்கு எனது வாழ்த்துகள்.

தமிழகத்தில் பள்ளி இறுதித் தேர்வு தமிழ் பாடத்தில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறாதது கவலையளிக்கிறது. இந்த நிலை மாற அனைவரும் ஆங்கிலம் கலப்பின்றி தமிழில் பேசுவது அவசியம். வருங்கால சந்ததியினருக்குத் தமிழில் பேச, எழுத சொல்லித் தருவது நமது கடமை” என்று அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி பேசும்போது, “வரும் ஆகஸ்ட் 12, 13, 14-ம் தேதிகளில் மயிலாப்பூரில் நடைபெறும் கம்பன் விழாவுக்கு தமிழ் ஆர்வலர்கள் பெருந்திரளாக வரவேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

Next Story
Share it