தமிழகம் முழுவதும் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கம் !!

தமிழகம் முழுவதும் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கம் !!

தமிழகம் முழுவதும் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கம் !!
X

22 லட்சம் பேர் எழுதும் குரூப் 4 தேர்வுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட குரூப் 4 பதவிகளில் காலியாக உள்ள 7,301 இடங்களை நிரப்புவதற்கான தேர்வு நாளை நடைபெறுகிறது.
நாளை காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை, கட்டாய தமிழ் மொழி தகுதி & மதிப்பீட்டுத் தேர்வு, பொது அறிவு, திறனறி பகுதி என்று மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
H
மாநிலம் முழுவதும் 7,689 மையங்களில் நடைபெறும் தேர்வை 22,02,942 பேர் எழுத உள்ளதாக TNPSC தெரிவித்துள்ள நிலையில், தேர்வர்களின் வசதிக்காக மாநிலம் முழுவதும் பரவலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
மாவட்ட ஆட்சியர்களின் கோரிக்கைகளின் படி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், சிறப்புப் பேருந்துகள் குரூப் 4 தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களில் நின்று செல்லும் என்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
Newstm.in
Next Story
Share it