Theme Check

சிறப்பு பள்ளிகள் இனி ‘அம்பேத்கர் சிறப்பு பள்ளி’.. முதல்வர் அறிவிப்பு..!

சிறப்பு பள்ளிகள் இனி ‘அம்பேத்கர் சிறப்பு பள்ளி’.. முதல்வர் அறிவிப்பு..!

சிறப்பு பள்ளிகள் இனி ‘அம்பேத்கர் சிறப்பு பள்ளி’.. முதல்வர் அறிவிப்பு..!
X

“அனைத்து சிறப்பு பள்ளிகளும் இனி ‘அம்பேத்கர் சிறப்பு பள்ளி’ என்று அழைக்கப்படும்; நமது சிறந்த பள்ளிகளுக்கு அவரது பெயரைச் சூட்டுவதே அவருக்கு மரியாதை செலுத்தும் சிறந்த வழி” என்று, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தலைநகர் டில்லியில் இன்று (14-ம் தேதி) அம்பேத்கர் சிறப்பு பள்ளிகளை மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார்.
Delhi Government's SSoE Will Now Be Known As B R Ambedkar School of Specialised  Excellence: CM Arvind Kejriwal
இது தொடர்பான விழாவில் அவர் பேசியதாவது: “அம்பேத்கர், கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அனைத்து சிறப்பு பள்ளிகளும் இனி ‘அம்பேத்கர் சிறப்பு பள்ளி’ என்று அழைக்கப்படும். நமது சிறந்த பள்ளிகளுக்கு அவரது பெயரைச் சூட்டுவதே அவருக்கு மரியாதை செலுத்தும் சிறந்த வழி.

டில்லியில் இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் இருந்து விலகி 3.75 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். தற்போது, அரசியலில் பள்ளிகள் பற்றி பேசப்படுவது நல்ல விஷயம்தான்.

எதிர்க்கட்சிகள் தலைவர்கள் பள்ளிகளுக்கு சென்று, அங்கு குறைகள் இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் என கோருகிறோம். தவறுகளை திருத்துகிறோம்” என்று அவர் பேசினார்.

Next Story
Share it