Theme Check

இலங்கை மீண்டும் அட்டூழியம் – தமிழக மீனவர்கள் கைது!!

இலங்கை மீண்டும் அட்டூழியம் – தமிழக மீனவர்கள் கைது!!

இலங்கை மீண்டும் அட்டூழியம் – தமிழக மீனவர்கள் கைது!!
X

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.

கடந்த 23ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 16 மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 16 பேர் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

fishermna

இதை கண்டித்து ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அத்துடன் கடந்த இரண்டு நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களின் விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மீனவர்கள் ஊர்காவல்துறை துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

fishermna

இலங்கை கடற்படையின் அத்துமீறல் தொடர்வதால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து அச்சமடைந்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it