Theme Check

தாய் கண்டித்ததால் இலங்கை தமிழ் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

தாய் கண்டித்ததால் இலங்கை தமிழ் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

தாய் கண்டித்ததால் இலங்கை தமிழ் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!
X

இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வந்த ராணி என்ற பெண் ஒரு மகன், 3 பெண் பிள்ளைகளுடன் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கி வசித்து வருகிறார். ராணியின் மகன் நிரோஜன் (22) பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார்.

இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் உள்ள நண்பர்களுடன் செல்போனில் கேம் விளையாடி சுற்றித் திரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராணி தனது மகனை கேம் விளையாடுவதை விட்டுவிட்டு வேலைக்கு செல்லுமாறு கண்டித்துள்ளார்.

young-man-committed-suicide

தாயின் கண்டிப்பால் மனமுடைந்த நிரோஜன், தனது வீட்டில் இருந்த எலி மருந்தை தண்ணீரில் கலந்து வீட்டிற்கு பின்புறம் வைத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடித்துள்ளார். இதையடுத்து மயக்க நிலையில் இருந்த நிரோஜனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் மண்டபம் கேம்ப்பில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் தனியார் வாகன மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த நிரோஜன் உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமிற்கு கொண்டுவரும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

young-man-committed-suicide

மேலும் இது குறித்து அவரது சகோதரி பிரியா கொடுத்த புகாரின் பேரில் மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலைக்கு செல்லாமல் தனது செல்போனில் கேம் விளையாடுவதை தாய் கண்டித்ததால் விபரீத முடிவு எடுத்த இளைஞரால் அப்பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Next Story
Share it