போராட்டக்காரர்களை சுட்டுத்தள்ளலாம்.. முப்படைக்கு இலங்கை அரசு உத்தரவு !!

போராட்டக்காரர்களை சுட்டுத்தள்ளலாம்.. முப்படைக்கு இலங்கை அரசு உத்தரவு !!

போராட்டக்காரர்களை சுட்டுத்தள்ளலாம்.. முப்படைக்கு இலங்கை அரசு உத்தரவு !!
X

இலங்கையில் அரசு மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினால் சுட்டுத்தள்ளலாம் என இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் பொது சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனிநபர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் மீதும் தூப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. முப்படையினருக்கு இதற்கான அனுமதியை வழங்கி இலங்கை அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

voilance

இந்நிலையில் இலங்கையில் மக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் வன்முறையை கைவிடுமாறும் அதிபர் கோத்தபய ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருதாகவும், ஒருமித்த கருத்து மூலம் அரசியல் நிலைத்தன்மையை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுவதாகவும் அதிபா் அதிபா் கோத்தபய ராஜபக்சே தனது டுவிட்டா் பக்கத்தில் தொிவித்துள்ளாா்.

voilance

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு அதிபா் கோத்தபய ராஜபக்சேவின் அரசே காரணம் எனக்கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் உறவினர்கள், ஆளும்கட்சி எம்.பி.க்கள் வீடுகளுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்து வருகின்றனர். இந்த நிலையில், இலங்கையில் அரசு மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினால் சுட்டுத்தள்ளலாம் என இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it