இன்று கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்..!!
இன்று கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்..!!

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இன்று காலை 10 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது. நான்கு பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை நாடாளுமன்றம் கூடுகிற்து.அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சிறிசேனாவின் இலங்கை சுதந்திரக்கட்சி திரும்பப்பெற்றுள்ள நிலையில் நாடாளுமன்றம் கூடுகிறது.
பொருளாதார பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் அதிபர், பிரதமருக்கு எதிராக இலங்கை முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.
இதனிடையே கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. 'GotaGoHome' என்ற ஹேஷ்டாக் சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.
Tags:
Next Story