சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன் !!

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன் !!

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன் !!
X

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தனது நண்பரும் காதலருமான சாந்தனு ஹஸாரிகா உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இதற்கிடையே, ஸ்ருதிஹாசன் தற்போது பல முன்னணி படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கின்றார். தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். அனைத்து மொழிகளிலும் ஸ்ருதிஹாசன் தனி ரசிகர்கள் பட்டாளம் கொண்டுள்ளார். இந்த நிலையில், இவர் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

shuruthihassan

ஏழாம் அறிவு படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் ஸ்ருதிஹாசன். இவரது நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் லாபம். அத்துடன் இவர் நடித்த 3 தெலுங்குப் படங்கள் மற்றும் ஒரு பாலிவுட் படம் வெளியானது. இதையடுத்து, பிரபாஸ் நடிக்கும் பான் இந்தியா படமான சலாரில் நடித்து வருகிறார். தமிழில் நேரடி படத்தில் நீண்டகாலமாக நடிக்கவில்லை.

இந்நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் 154 வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை நடிகர் சிரஞ்சீவி தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிசெய்துள்ளார்.

அதேபோல் நடிகர் பாலகிருஷ்ணாவின் 107 வது படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:
Next Story
Share it