Theme Check

போதி தர்மர் மரபணுவில் வந்தவர் ஸ்டாலின்.. காங். எம்எல்ஏ செல்வப் பெருந்தகை புகழாரம்..!

போதி தர்மர் மரபணுவில் வந்தவர் ஸ்டாலின்.. காங். எம்எல்ஏ செல்வப் பெருந்தகை புகழாரம்..!

போதி தர்மர் மரபணுவில் வந்தவர் ஸ்டாலின்.. காங். எம்எல்ஏ செல்வப் பெருந்தகை புகழாரம்..!
X

தமிழக சட்டப்பேரவையில் இன்று மாற்றுத்திறனாளிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது, விளையாட்டுத் துறையில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் திமுக அரசு மேற்கொள்ளும் என்று, விதி எண் 11–ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை பேசுகையில், “தமிழக முதல்வர் ஸ்டாலின், கட்சிக்கும் ஆட்சிக்கும் எடுத்துக்காட்டாக உள்ளார். உடல் மற்றும் உள்ள வலிமையில் தமிழக மக்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

உடல் வலிமை மற்றும் உள்ளம் வலிமை இருந்தால்தான் அறிவுத்திறன் அதிகரிக்கும். அதில், தான் மட்டும் இருந்தால் போதாது என்றும் என்னுடைய தமிழகமே இருக்க வேண்டும் என்று இத்தகைய அறிவிப்பை முதல்வர் அறிவித்துள்ளார்.

முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள் எனக்கு ஒன்றை மட்டும் நினைவுப்படுத்துகிறது. அதன்படி, நான் பிறந்த மண்ணில் பிறந்த போதி தர்மர் உலகம் முழுவதும் விளையாட்டுகள் மற்றும் தற்காப்பு கலைகளை சொல்லிக் கொடுத்தவர்.

ஒரு வேளை போதி தர்மர் இல்லையென்றால், மேலை நாடுகளில் இந்த விளையாட்டுகள் விரிவடைந்து இருக்காது. இதனை மேலை நாட்டவர்களும் ஏற்றுக் கொண்டதால்தான் அவர்கள் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கங்களை அதிக அளவில் பெறுகிறார்கள். ஆனால், நம் நாடு பின்தங்கிவிட்டது.

ஒரு முறை ஜப்பான் வீரர் ஒருவர் தங்கப்பதக்கம் பெறும்போது, தனக்கு இந்த திறனும் சக்தியும் போதி தர்மரிடம் இருந்துதான் கிடைத்தது என்று கூறினார்.

அவ்வாறு புகழ்பெற்ற போதி தர்மர் மரபணுவில் வந்தவர்தான் முதல்வர் ஸ்டாலின். அதனால்தான் விளையாட்டுகளை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்தார்.

Next Story
Share it