முதலீடுகளை ஈர்க்க.. துபாய் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்..!
முதலீடுகளை ஈர்க்க.. துபாய் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்..!

துபாயில் நடைபெறும் உலக எக்ஸ்போ கண்காட்சியில் மார்ச் 25-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்பட உள்ளது.
இதையொட்டி, உலக எக்ஸ்போ கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கினை திறந்து வைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்டார்.
அங்கு தொழில் துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாச்சாரம், கைத்தறி, கைவினை பொருட்கள், ஜவுளி, தமிழ் வளர்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழிற் பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் வண்ணம் காட்சிப்படங்கள் தொடர்ச்சியாக திரையிடப்படவுள்ளன.
தமிழகத்திற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அபுதாபிக்கும் அவர் செல்லவுள்ளார். அத்துடன், புலம்பெயர் தமிழர்களுடனான சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொழில் துறை அமைச்சர், தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலர், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆகியோர் முதலமைச்சர் தலைமையிலான குழுவில் துபாய் புறப்பட்டுச் சென்றனர்.

