மாநிலங்களவை தேர்தல்.. தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு..!
மாநிலங்களவை தேர்தல்.. தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு..!

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் முக்கிய கட்சிகளின் சார்பில் மனு தாக்கல் செய்த ஆறு பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திமுக சார்பில் போட்டியிட்ட சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், ஆர்.கிரிராஜன் ஆகியோரும், அதிமுக சார்பில் போட்டியிட்ட சி.வி.சண்முகம், ஆர்.தர்மர், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ப.சிதம்பரம் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான நேரம் இன்று மாலை 3 மணியுடன் நிறைவு பெற்ற நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்திருந்த ஆறு பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை, பேரவைச் செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கி.சீனிவாசன் வெளியிட்டார்.
Next Story

