இலங்கையில் மீண்டும் அவசர நிலை பிரகடனம்!!
இலங்கையில் மீண்டும் அவசர நிலை பிரகடனம்!!

சட்டம், ஒழுங்கை பாதுகாக்க இலங்கையில் இன்று முதல் மீண்டும் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத ஆட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே சமீபத்தில் பதவி விலகினார். இதனையடுத்து ரணில் விக்ரமசிங்கே, இடைக்கால அதிபராக பதவியேற்று உள்ளார்.
புதிய அதிபருக்கான தேர்தல் 20ஆம் தேதி நடக்கிறது. கோத்தபய ராஜபக்சே பதவி விலகினாலும், எதிர்ப்பை கைவிடாத போராட்டக்காரர்கள் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராகவும் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

நாட்டின் ஒட்டுமொத்த அரசு அமைப்பையும் மாற்றும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்து உள்ளனர். பொருளாதார நெருக்கடி நாளுக்குநாள் மோசமடைந்து வரும் நிலையில், நாட்டில் மின்சாரத்துக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இதனால் இன்றும், நாளையும் தலா 3 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்த உள்ளதாக மின்துறை அறிவித்து உள்ளது. போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளதால் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க இன்று முதல் மீண்டும் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவின்பேரில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு சட்டத்தின் 2ஆவது பிரிவின் கீழ் இன்று முதல் இலங்கையில் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
newstm.in

