வீடு கட்ட தோண்டிய குழிக்குள் சிலைகள்.. அதிர்ச்சி அடைந்த உரிமையாளர்..!
வீடு கட்ட தோண்டிய குழிக்குள் சிலைகள்.. அதிர்ச்சி அடைந்த உரிமையாளர்..!

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி மண்டித் தெருவில் வசிக்கும் முத்து என்பவர் அவரது இடத்தில் வீடு கட்டுவதற்கு ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டியுள்ளார்.
அப்போது, தோண்டப்பட்ட குழிக்குள் சுமார் 3 அடி உயரம் கொண்ட பெருமாள் சிலை, 1 அடி உயரமுள்ள அப்பர் சிலை மற்றும் சிறிய வகை சிலைகள் அடங்கிய உலோக கலயம் கிடைத்துள்ளன.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்து, இதுகுறித்து ஆலங்குடி ஊராட்சி மன்றத் தலைவரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் வலங்கைமான் வட்டாட்சியரிடம் தகவல் தெரிவித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வலங்கைமான் வட்டாட்சியர் சிலைகளை ஆய்வு செய்தார்.
இதையடுத்து, சிலைகளை வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும், வீடு கட்டும் பணியை நிறுத்தி வைக்கும்படி வட்டாட்சியர் கூறியுள்ள நிலையில், இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

