Theme Check

கோமியம் குடிச்சுட்டு ரெடியா இருங்க.. மாலை பேசுகிறேன்.. பாஜகவுக்கு பெண் எம்பி சவால்..!

கோமியம் குடிச்சுட்டு ரெடியா இருங்க.. மாலை பேசுகிறேன்.. பாஜகவுக்கு பெண் எம்பி சவால்..!

கோமியம் குடிச்சுட்டு ரெடியா இருங்க.. மாலை பேசுகிறேன்.. பாஜகவுக்கு பெண் எம்பி சவால்..!
X

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பேச்சு அதிர்வலையை ஏற்படுத்தியது.

அது இன்னும் அடங்காத நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பாஜகவினருக்கு சவால் விடுத்திருக்கிறார்.
Memsahib' Mahua Moitra is bringing what Parliament never had: a call out  culture
இவர் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, “அதிகார மமதை, வெறுப்பு, மதவெறி, பொய் ஆகியவற்றால் மறைந்திருக்கும் கோழைகள், இந்த விஷயங்களை வீரம் என்று கருதுகிறார்கள்.

இந்த அரசும் தனது பிரச்சாரத்தில் பொய்களை பரப்புவதன் மூலம் கோழைத்தனத்தை வீரம் என்று காட்டுவதை தங்களது மிகப்பெரிய வெற்றியாக கருதி வருகிறது” என்று பேசி, அவையை அதிர வைத்தார்.

இந்நிலையில், இந்த முறையும் தனது பேச்சு குறித்த முன்னோட்டத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “இன்று மாலை நான் மக்களவையில் ஜனாதிபதி உரை மீதான தீர்மானத்தின் போது பேசுகிறேன்.

பெண் எம்பி

பாஜகவினரே, கற்பனைக் கதைகளை கட்டவிழ்க்கும் உங்களுடைய தாக்குதல் படையைத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். வேண்டுமென்றால், கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Next Story
Share it