உஷாரா இருங்க பெற்றோர்களே ... கேஜிஎப் ராக்கி பாய் போல் மாற நினைத்த சிறுவனுக்கு நேர்ந்த கதி!!

உஷாரா இருங்க பெற்றோர்களே ... கேஜிஎப் ராக்கி பாய் போல் மாற நினைத்த சிறுவனுக்கு நேர்ந்த கதி!!

உஷாரா இருங்க பெற்றோர்களே ... கேஜிஎப் ராக்கி பாய் போல் மாற நினைத்த சிறுவனுக்கு நேர்ந்த கதி!!
X

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் ராஜேந்திர நகர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன், மூச்சு திணறல் காரணமாக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

KGF

ஆபத்து கட்டத்தை தாண்டிய சிறுவனிடம், எதனால் மூச்சு தின்றால் ஏற்பட்டது என்று மருத்துவர்கள் கேட்டபோது அவன் கூறிய பதில் அவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த வாரம் கேஜிஎப் 2 படம் பார்த்த சிறுவன், அந்த படத்தின் நாயகன் ராக்கி பாய் போல் மாற வேண்டும் என நினைத்துள்ளான்.

அதனால், ராக்கி பாய் போல் சிகரெட் புகைக்க நினைத்த சிறுவன், ஒரே நேரத்தில் ஒரு பாக்கெட் சிகரெட்டை வாங்கி புகைத்துள்ளான். முதல் முறையாக, அதுவும் ஒரு பாக்கெட் அளவில் புகைபிடித்ததன் காரணமாக சிறுவனுக்கு நள்ளிரவில் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

smoke

அதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில், சிறுவனை அவரது பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தீவர சிகிச்சை பின் சிறுவன் நலமாக இருப்பதாகவும், ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

திரைப்படங்ள் மூலம் இளம் தலைமுறையினர் அதிக அளவில் ஈர்க்கப்படுவதன் விளைவாக, படத்தில் வரும் கதாநாயகர்களின் நடவடிக்கைகளை அவர்கள் வாழ்வில் கடைபிடிக்க முயல்வதால் சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாக மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:
Next Story
Share it