இப்பவும் அதே எனர்ஜி... மாஸ் காட்டும் மன்சூர் அலிகான்!!
இப்பவும் அதே எனர்ஜி... மாஸ் காட்டும் மன்சூர் அலிகான்!!

சக்கு சக்கு வத்திக்குச்சி பாடலுக்கு 27 ஆண்டுகளுக்கு பிறகு அதே எனர்ஜியுடன் மன்சூர் அலிகான் டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.
80 மற்றும் 90களில் வெளியான பாடல்களை தனது படத்தில் பயன்படுத்தும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்தில் வில்லன்களின் கோடு வேர்டாக மன்சூர் அலிகானின் ‘சக்கு சக்கு வத்திக்குச்சி’ பாடலை பயன்படுத்தியிருப்பார்.
இந்தப் பாடல் மிகப் பெரிய அளவில் ரசிகர்களிடையே சென்றடைந்தது. கடந்த 1995ஆம் ஆண்டு வேலு பிரபாகரன் இயக்கத்தில், அருண் பாண்டியன், நெப்போலியன், மன்சூர் அலிகான், செந்தில், ராதா ரவி, ரோஜா ஆகியோர் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ படத்தில் இப்பாடம் இடம் பெற்றிருந்தது.
" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">
ஆதித்யன் இசையமைப்பில் உருவான பாடல் தான் ‘சக்கு சக்கு வத்திக்குச்சி’. இந்தப் பாடல் மீண்டும் பிரபலமடைந்ததையொட்டி, அந்தப் பாடலுக்கு சுமார் 27 வருடங்கள் கழித்து அதே எனர்ஜியுடன் மன்சூர் அலிகான் நடனமாடியுள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
#mansooralikhan #chakkuchakkuvathikuchi 💥🔥🔥 pic.twitter.com/Hvt6lpIDWO
— தளபதி ரசிகர்களின் ஒருவன் (@JilluSasi) June 25, 2022
newstm.in

