Theme Check

விளம்பரத்திற்காக பிதற்றுவதை நிறுத்து.. மதுரை ஆதீனத்திற்கு எச்சரிக்கை..!

விளம்பரத்திற்காக பிதற்றுவதை நிறுத்து.. மதுரை ஆதீனத்திற்கு எச்சரிக்கை..!

விளம்பரத்திற்காக பிதற்றுவதை நிறுத்து.. மதுரை ஆதீனத்திற்கு எச்சரிக்கை..!
X

விஜய் நடித்த படங்களை பார்க்கக் கூடாது என பேசிய மதுரை ஆதீனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை விஜய் ரசிகர்கள் கண்டன போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

மதுரையில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற துறவியர் மாநாட்டின் ஒரு பகுதியாக பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய மதுரை ஆதீனம், 'நடராஜ சுவாமி, முருகன் உள்ளிட்ட சுவாமிகளை கேவலமாக பேசுகின்றனர்.
நடிகர் விஜய் படங்களை பார்க்காதீர்கள்
நடிகர் விஜய் நம்ம விநாயகர் கடவுளை பற்றி குறைத்து பேசுகிறார். அவர் நடித்த படத்தை பார்க்காதீர்கள்' என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதனால், தற்போது ஆதீனத்துக்கு எதிராக விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்ட ஆரம்பித்துள்ளனர்.

அந்த வகையில் நேற்று ஒட்டப்பட்ட போஸ்டரில், ‘மதுரை ஆதீனம் மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடுறீங்களேப்பா... நீங்கள் எல்லாம் தளபதியை பத்தி பேசலாமா தப்பா.
Vijay Fans Poster against madurai aadheenam: மதுரை ஆதீனத்திற்கு எச்சரிக்கை  விடுத்த விஜய் ரசிகர்கள்; பரபரப்பு போஸ்டரால் அதிர்ந்த மாநகரம்! - vijay fans  warned madurai ...
வீண் விளம்பரத்திற்காக கோமாவில் எழுந்து வந்து பிதற்றுவதை நிறுத்து. எங்களுக்கு ஜாதி மதம் ஏதுமில்லை. தளபதி மேல் மக்கள் கொண்டாடும் அன்புக்கு வானமே எல்லை' என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், ஆதீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், இந்து அமைப்புகள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Story
Share it