போரை நிறுத்தங்கள்..!! மழலை மாறாத குரலால் உலக தலைவர்களுக்கு கோரிக்கை வைத்த குழந்தை லில்லி!!

போரை நிறுத்தங்கள்..!! மழலை மாறாத குரலால் உலக தலைவர்களுக்கு கோரிக்கை வைத்த குழந்தை லில்லி!!

போரை நிறுத்தங்கள்..!! மழலை மாறாத குரலால் உலக தலைவர்களுக்கு கோரிக்கை வைத்த குழந்தை லில்லி!!
X

உக்ரைனை ரஷ்யா தரை, கடல், வான் என அனைத்து விதங்களிலும் தாக்கி வருகிறது. மேலும் இந்த தாக்குதலால் 1000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளிவந்தவண்ணம் உள்ளது.

இந்த நிலையில், மனிதாபிமானமற்ற இந்த போரை நிறுத்த கோரி லில்லி என்ற சிறுமி உலக தலைவர்களிடம் தனது இன்ஸ்டாகிராமின் வீடியோ பதிவு வாயிலாக கோரிக்கைவைத்துள்ளார்.

பிரிட்டிகிட்டி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக லில்லி பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், ‘எனக்கு உலகத்தின் ஒருபகுதி மட்டும் வேண்டாம், அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய அமைதியான உலகம் வேண்டும், நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் அதனால் இந்த போரை நிறுத்தங்கள்’ என தனது மழலை மாறாத குரலால் உலக தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சுமார் 1.1 மில்லியன் பின்தொடர்பாளர்களை கொண்ட பிரிட்டிகிட்டி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த வீடியோ கிட்டத்தட்ட 1 மில்லியன் பார்வையாளர்களை சூறாவளியாய் கடந்து உலக மக்கள் மற்றும் தலைவர்களிடம் அமைதியை கோரிவருகிறது.

Tags:
Next Story
Share it