காரை நிறுத்தி நடிகையின் முடியை பிடித்து இழுத்து தாக்குதல்!! VIDEO
காரை நிறுத்தி நடிகையின் முடியை பிடித்து இழுத்து தாக்குதல்!! VIDEO

சென்னையில் நடைபெற இருந்த திரைப்பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ள நடிகரும், நடிகையும் ஒரே காரில் வந்தபோது, நடிகரின் மனைவி, காரை வழிமறித்து நடிகையை தாக்கினார்.
ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த நடிகை மிஸ்ரா, சமீபத்தில் பிரேமம் என்ற ஒடிசா படத்தில் நடிகர் மொஹந்தியுடன் சேர்ந்து நடித்திருந்தார். ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்கு இருவரும் ஒப்பந்தமாகி இருந்தனர். இதற்கான சூட்டிங் சென்னையில் நடைபெற இருந்தது.
சென்னைக்கு வருவதற்காக நேற்று காலை நடிகை மிஸ்ராவும், நடிகர் மொஹந்தியும் ஒரே காரில் புவனேஸ்வர் விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது நடுரோட்டில் அவர்களின் காரை நடிகர் மொஹந்தியின் மனைவி திருப்தி வழிமறித்தார்.
காரின் கதவை திறந்து உள்ளே சென்ற திருப்தி, நடிகை மிஸ்ரா, நடிகர் மொஹந்தி இருவரையும் அடித்து உதைத்தார். அதோடு நடிகை மிஸ்ராவின் தலைமுடியை பிடித்து காரிலிலிருந்து வெளியில் இழுத்தார். காரை விட்டு வெளியில் வந்த மிஸ்ராவை ரோட்டில் வைத்து திருப்தி அடித்து உதைத்தார்.
மிஸ்ரா அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை நோக்கி ஓடினார். அவரை திருப்தி விரட்டிச் சென்று திருப்தி தாக்க முயல, நடிகை மிஸ்ரா ஆட்டோவில் ஏறி தப்பித்தார். பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவத்தை பொதுமக்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர்.
" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">
அவர்களில் சிலர் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட சம்பவம் வைரலாக பரவி விட்டது. நடிகை மிஸ்ராவுக்கும், நடிகர் மொஹந்திக்கும் இடையே திருமணம் மீறிய உறவு இருப்பதாக திருப்தி குற்றம்சாட்டியுள்ளார். நடிகை தாக்கப்பட்டது குறித்து அவரது தாயார் புவனேஸ்வர் போலீஸில் புகார் செய்து இருக்கிறார்.
newstm.in