திருடப்பட்ட தனது பைக்கை போலீஸ் பயன்படுத்தி வருவதாக விநோத புகார்!!
திருடப்பட்ட தனது பைக்கை போலீஸ் பயன்படுத்தி வருவதாக விநோத புகார்!!

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட தனது மோட்டார் சைக்கிளை தற்போது போலீஸ் பயன்படுத்தி வருவதாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் புகாரளித்துள்ளார்.
இம்ரான் என்பவர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது பைக்கை தொலைத்து விட்டார். லாகூரில் உள்ள முகல்புரா பகுதியில் இருந்து பைக் திருடப்பட்டதாக அவர் புகாரளித்து இருந்தார். அவரது புகார் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டபோதும், பைக் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் இப்போது இம்ரானுக்கு ஒரு இ - சலான் வழங்கப்பட்டது. அதாவது தொலைந்து போன அந்த பழைய பைக்கில் பயணிக்கும்போது போக்குவரத்து வீதிகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதாக சலான் வழங்கப்பட்டது.

அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த இம்ரான், சலானில் விதி மீறியதாக சொல்லப்பட்ட இடத்திற்கு சென்று கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அப்போது காவல் அதிகாரி ஒருவர் தனது பைக்கை ஓட்டி வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து தலைமை அதிகாரியிடம் இம்ரான் புகார் அளித்தார். அதைப் பயன்படுத்தி போலீஸாரிடமிருந்து தனது பைக்கை மீட்டுத் தருமாறு அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
newstm.in

