Theme Check

பள்ளி மாணவிகளுக்காக அசத்தல் திட்டம்.. இனி கவலை வேண்டாம் !!

பள்ளி மாணவிகளுக்காக அசத்தல் திட்டம்.. இனி கவலை வேண்டாம் !!

பள்ளி மாணவிகளுக்காக அசத்தல் திட்டம்.. இனி கவலை வேண்டாம் !!
X

மாநகராட்சி பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு சென்னை மாநகராட்சி இலவசமாக சானிடரி நாப்கின் வழங்கவுள்ளது.

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மாதவிடாய் கால உடல் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்க 'கண்ணியம்' எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதற்காக நிர்பயா நிதியிலிருந்து ரூ. 4.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாணவிக்கும் மாதந்தோறும் 10 நாப்கின்கள் வழங்கப்படும். மாநகராட்சிப் பள்ளிகளில் 6 முதல் 12 வரை மொத்தம் 25,474 மாணவிகள் படிக்கின்றனர். இந்த முன்னெடுப்பின் மூலம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயனடைய உள்ளனர் எனவும் தெரிவிக்கின்றனர்..
corparation
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், மாதந்தோறும் ஆசிரியர்களிடமிருந்து 10 நாப்கின்களை மாணவிகள் பெற்றுக்கொள்ளலாம். உடனடியாகத் தேவைப்படுவோருக்காக கழிப்பறைகளிலேயே கூடுதல் நாப்கின்கள் வைக்கப்பட்டிருக்கும். அவசரப் பயன்பாட்டுக்கு பள்ளி கழிப்பறைகளில் 50 நாப்கின்கள் வைக்கப்பட்டிருக்கும்.

இந்த நடைமுறையைக் கண்காணிக்க ஒவ்வொரு 10 பள்ளிகளுக்கும் ஒரு பெண் அதிகாரி என 16 பெண் அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர். இவர்கள் மாநகராட்சி கல்வித் துறைக்கு தகவல்களை சமர்ப்பிப்பார்கள், எனவும் கூறினார்.


newstm.in

Next Story
Share it