வீட்டில் கொள்ளையடித்துவிட்டு காதலை வெளிப்படுத்திய விநோத கொள்ளையர்கள் !!
வீட்டில் கொள்ளையடித்துவிட்டு காதலை வெளிப்படுத்திய விநோத கொள்ளையர்கள் !!

வீடு ஒன்றில் கொள்ளையடித்த திருடர்கள், அங்கு தங்களது காதலை வெளிப்படுத்திய நிகழ்வு அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.
கோவா மாநிலம் மர்கோவாவில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஊரில் வசித்து வந்த ஆசிப் ஜெக் என்பவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். 2 நாள் கழித்து அவர் வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது கொள்ளை நடந்திருப்பதை அறிந்தார். வீட்டில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளும், ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும் கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அத்துடன், டி.வி. திரையில் 'ஐ லவ் யூ' என்று கொள்ளையர்கள் மார்க்கர் பேனாவால் எழுதி வைத்திருந்தனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில் மர்கோவா போலீசார் கொள்ளை வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிகளவில் பணம், நகை கிடைத்த மகிழ்ச்சியில் கொள்ளையர்கள் ஐ லவ் யூ என்று எழுதிவைத்து சென்றதாக காவல்துறையினர் கூறுகின்றனர். அங்கிருந்த சிசிடிவி பதிவுகள் மூலம் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
newstm.in

