'வலிமை' படத்தில் வெட்டப்பட்ட காட்சிகள் யூடியூப்பில் வெளியீடு !

'வலிமை' படத்தில் வெட்டப்பட்ட காட்சிகள் யூடியூப்பில் வெளியீடு !

வலிமை படத்தில் வெட்டப்பட்ட காட்சிகள் யூடியூப்பில் வெளியீடு !
X

வலிமை படத்தில் குறைக்கப்பட்ட காட்சிகள் யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அஜித் நடித்த வலிமை படம் பிப்ரவரி 24ஆம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அஜித்க்கு திரைப்படம் வெளியானதால் அவரது ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். இதுவரை தமிழகத்தில் வெளியான படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை வலிமை முறியடித்துள்ளது.

படத்துக்கு சில எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தாலும் வசூலையும் பெரும் வரவேற்பையும் குவித்து வருகிறது. வலிமை படம் முதல் நாளே தமிழகத்தில் மட்டும் 35 கோடிகளை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை விட வெளிநாடுகளில் வலிமை படத்திற்கு வரவேற்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

valimai

ஆனால், வலிமை படம் இரண்டு மணி நேரம் 52 நிமிடங்கள் ஓடியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து அதிருப்தி எழுந்தது. இதனால் படத்தில் சில காட்சிகளை நீக்கி, ரன்னிங் டைமை குறைக்க படக்குழு முடிவு செய்தது.

அதன்படி வலிமை படத்தில் 14 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டரை மணி நேரம் கொண்ட படமாக வலிமை படம் இன்று முதல் திரையிடப்பட்டு வருகிறது. செகண்ட் ஆஃப்பை விட ஃபஸ்ட் ஆஃப்பில் நிறைய காட்சிகளை குறைத்துள்ளனர். குறைக்கப்பட்ட காட்சிகள் யூடியூப்பில் வெளியாகியுள்ளது.

" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="811">

newstm.in

Tags:
Next Story
Share it