Theme Check

‘வலிமை’ விமர்சனம்.. ப்ளூ சட்டை மாறனுக்கு அஜித் பதிலடி..!

‘வலிமை’ விமர்சனம்.. ப்ளூ சட்டை மாறனுக்கு அஜித் பதிலடி..!

‘வலிமை’ விமர்சனம்.. ப்ளூ சட்டை மாறனுக்கு அஜித் பதிலடி..!
X

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் பிப்ரவரி 24-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. முதல் நாளே, பல படங்களில் முதல் நாள் வசூல் சாதனையை ‘வலிமை’ முறியடித்து விட்டது.

உலகம் முழுவதும் ‘வலிமை’ படத்தின் வசூல் இதுவரை ரூ.200 கோடியை தாண்டி விட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம், ‘வலிமை’ படத்தின் கலெக்ஷன் எவ்வளவு என்பது இதுவரை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், ‘வலிமை’ படத்தை விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன், அஜித்தை உருவ கேலி செய்து மிக மோசமாக விமர்சித்திருந்தார். அஜித் ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து ப்ளூ சட்டை மாறனை திட்டி தீர்த்து வந்தனர்.
Blue Sattai Maran Reply to Ajith Fans
பதிலுக்கு, ப்ளூ சட்டை மாறனும் அஜித்தையும், அவரது ரசிகர்களையும் மிக கடுமையாக தாக்கி விமர்சித்து வந்தார். ‘வலிமை’ திரைப்படத்தால் பல மாவட்டங்களில் விநியோகஸ்தர்களுக்கு பல கோடி நஷ்டம் என்றும் கூறி இருந்தார்.

இந்நிலையில், “ரசிகர்களிடம் இருந்து அன்பையும், வெறுப்பவர்களிடம் இருந்து வெறுப்பையும், நடுநிலையாளர்களிடம் இருந்து நியாயமான விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்வேன்” என்று, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடிகர் அஜித் கூறி இருந்தார்.

இதை நினைவு படுத்தி, “எப்போதும் அளவுக்கதிகமான அன்பு” என்று குறிப்பிட்டு, தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறனுக்கு நடிகர் அஜித் பதிலடி கொடுத்துள்ளார்.
Next Story
Share it