Theme Check

மாணவி எடுத்த விபரீத முடிவு.. பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை..!

மாணவி எடுத்த விபரீத முடிவு.. பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை..!

மாணவி எடுத்த விபரீத முடிவு.. பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை..!
X

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சீத்தாராம்பாளையம் சக்திவேல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (45). இவரது மனைவி சந்தனமாரி (35).

இந்தத் தம்பதியின் மகள் அர்ச்சனா (14). இவர், திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், இன்று மதியம் வாந்தி வருவதாகக் கூறி வகுப்பறையில் இருந்து வெளியே சென்றவர் பள்ளியின் இரண்டாவது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்துள்ளார்.

இதில், கால் எலும்பு முறிந்து வயிற்றில் பலமாக அடிபட்ட நிலையில் கிடந்த மாணவியை பார்த்த ஆசிரியர்கள் உடனடியாக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு நகர போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

திருச்செங்கோடு காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
Next Story
Share it