Theme Check

கடலில் மூழ்கி உயிரிழந்த மாணவன்!! மூழ்கும் போது சிரித்த நண்பர்கள்!!

கடலில் மூழ்கி உயிரிழந்த மாணவன்!! மூழ்கும் போது சிரித்த நண்பர்கள்!!

கடலில் மூழ்கி உயிரிழந்த மாணவன்!! மூழ்கும் போது சிரித்த நண்பர்கள்!!
X

சென்னை தண்டையார்பேட்டை நேரு நகர், மெயின் தெருவைச் சேர்ந்தவர் ஏஜாஸ் (17) அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தன்னுடன் படிக்கும் கிஷோர் குமார், ஜெகதீஷ், மகேஷ்குமார் ஆகியோருடன் காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் வார்ப்பு பகுதியில் குளிக்க சென்றார்.

அப்போது நண்பர்கள் மேலிருந்து கீழே குதித்தை அடுத்து, ஏஜாஸூம் கடலில் குதித்தார். அப்போது அவர் நீரில் தத்தளிக்க தொடங்கினார். அதை அவர் உடன் வந்த நண்பர்கள் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தனர்.

ஏஜாஸை காப்பாற்றாமல் நண்பர்கள் சிரிப்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. பின்னர் ஏஜாஸ் நீந்த முடியாமல் கடலில் மூழ்கினார். இதனையடுத்து மீனவர்களுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

drowing

சம்பவ இடத்திற்கு வந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார், தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அவர்களும் கடலில் மூழ்கி மாயமான ஏஜாசை தேடிதனர். இந்நிலையில் மீனவர் ஒருவர் தேடும் போது மாணவனின் உடல் கிடைத்தது.

உடலை போலீஸார் ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it