Theme Check

மாணவர்களே தயாரா... ஏப்.25 - மே 2 வரை செய்முறைத் தேர்வு.. பட்டியல் வெளியீடு !

மாணவர்களே தயாரா... ஏப்.25 - மே 2 வரை செய்முறைத் தேர்வு.. பட்டியல் வெளியீடு !

மாணவர்களே தயாரா... ஏப்.25 - மே 2 வரை செய்முறைத் தேர்வு.. பட்டியல் வெளியீடு !
X

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 25 முதல் மே 2 வரை பிளஸ் 2 செய்முறைத் தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

கொரோனா எனும் கொடிய தொற்று பரவலால் உலகமே பெரும் பாதிப்பை எதிர்கொண்டது. கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. தற்போது கொரோனா குறைந்து வருவதால் இந்தியாவில் கல்வி நிறுவனங்கள் செயல்பட தொடங்கியுள்ளன. அந்த வகையில், தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கான அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித் துறை கடந்த மார்ச் 2 ஆம் தேதி வெளியிட்டது.

school student

அதன்படி, பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 ஆம் தேதியும் தொடங்குகிறது. தேர்வுக்கு மாணவர்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளையும் பள்ளி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதலில் 12 ஆம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு வருகிற ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் முதல் மே 2 ஆம் தேதி வரை நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

school student

மே 4 ஆம் தேதிக்குள் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதி தொடங்கி மே 30 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.


newstm.in

Next Story
Share it