Theme Check

மாணவர்களே, வரும் 26-ம் தேதி புத்தகங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்..!

மாணவர்களே, வரும் 26-ம் தேதி புத்தகங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்..!

மாணவர்களே, வரும் 26-ம் தேதி புத்தகங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்..!
X

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வரும் 26-ம் தேதி புத்தகம் இல்லா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் மாணவர்களின் மன அழுத்தத்தை நீக்குவதும், மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தி மாணவர்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிப்படையான உடல் நலம் மற்றும் மன வளத்தை மேம்படுத்துவதும் ஆகும்.
collect Plus two marksheets | ஜூலை 24 முதல் 30 வரை மாணவர்கள் மதிப்பெண்  பட்டியல் வாங்க பள்ளிகளுக்கு செல்ல அனுமதி | Tamil Nadu News in Tamil
மாணவர்கள் தங்கள் தனித்திறன்களை முழு சுதந்திரத்துடன் வெளிப்படுத்தவும், மன அழுத்தம் இல்லாத சூழ்நிலையை அனுபவங்களின் மூலம் கற்றுக் கொள்வதற்கும், உடல் மற்றும் மனம், அறிவுசார் திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்பாகவும் இது அமையும்.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் புத்தகங்களை எடுத்துச் செல்லும் சுமையை குறைத்து, வாழ்க்கைக்கான கல்வியை அனுபவங்கள் மூலம் மாணவர்கள் பெற்றிடும் வகையிலான செயல்பாடுகளை பள்ளிகளில் மேற்கொள்வதே இதன் நோக்கமாகும்.

பாரம்பரிய கலைகளை பற்றிய அறிவினை மாணவர்களிடையே புகுத்துவதன் மூலம் அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை இன்னும் பல நூற்றாண்டுகள் பாதுகாக்க முடியும்.

மேலும், விவசாயம் சார்ந்த அறிவுடன், மூலிகைத் தாவரங்கள் வளர்ப்பதன் அவசியத்தையும், மாடித் தோட்டங்களின் தேவைகளையும் மாணவர்கள் அறிய செய்தல் இன்றைய காலத்தின் அவசியமாக உள்ளது.

இதற்காக மாணவர் ஒருவருக்கு 10 ரூபாய் வீதம், 12,63,550 மாணவர்களுக்கு மொத்தம் 126.355 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Next Story
Share it