மாணவர்கள் அதிர்ச்சி..!! இந்த பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி படித்தால் செல்லாது!!
மாணவர்கள் அதிர்ச்சி..!! இந்த பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி படித்தால் செல்லாது!!

தமிழ்நாட்டில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் 20-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில், பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் தொலைதூரப் படிப்புகள் நடத்தி வருகின்றன. இதில் பல பல்கலைக்கழகங்களுக்கு, தொலைதூரப் படிப்புகளை நடத்தி வருகின்றன. அந்த வகையில், கடந்த 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பெரியார் பல்கலைக்கழகத்தில் 156 பாடத் திட்டம் மற்றும் பல்கலைக்கழக தொழில் கூட்டுத் திட்டம் மூலம் 12 கல்வி நிலையங்களில் தொழில்சார் பாடப் பிரிவுகளும் உள்ளன. தற்போது 350-க்கும் மேற்பட்ட மையங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழகம் நடத்தும் தொலைதூர பட்டப் படிப்புகள் செல்லாது என்றும் மாணவர்கள் யாரும் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தும் தொலைதூரக் கல்வியில் சேர வேண்டாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.

முன் அனுமதி பெறாமல் பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி மூலம் ஆன்லைன் படிப்புகள் நடத்துவது குறித்து விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது
இது தொடர்பாக, ஆளுநர் மற்றும் உயர் கல்வித்துறைச் செயலருக்கு பல்கலைக்கழக மானியக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.

