Theme Check

மாணவர்களுக்கு அரசு போட்ட புது ரூல்ஸ்..!வெளியானது அதிரடி உத்தரவு..!

மாணவர்களுக்கு அரசு போட்ட புது ரூல்ஸ்..!வெளியானது அதிரடி உத்தரவு..!

மாணவர்களுக்கு அரசு போட்ட புது ரூல்ஸ்..!வெளியானது அதிரடி உத்தரவு..!
X

பள்ளிகளில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக கல்வித்துறை சார்ந்த சுற்றறிக்கைகள் அவ்வப்போது வெளியாவது வழக்கம்.

அவ்வகையில், சமூக பாதுகாப்புத் துறை மூலம் வேலூர் உள்ளிட்ட சில மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு உத்தரவு அனுப்பப்பட்டிருக்கிறது.அந்த உத்தரவில், மாணவர்கள் பள்ளி வளாகங்களில் எந்த மாதிரியான பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 20க்கும் அதிகமான விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • மாணவ மாணவியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டும்.
  • மாணவ மாணவியர்கள் தினமும் பள்ளி சீருடையை சுத்தமாக அணிய வேண்டும்.
  • தலையில் எண்ணெய் வைத்து தலைவார வேண்டும் கை, கால் நகங்களை சுத்தமாக வெட்ட வேண்டும் மற்றும் தலை முடியை சரியான முறையில் வெட்டப்பட வேண்டும்.
  • காலில் காலணி அணிய வேண்டும்.
  • மாணவர்கள் 'டக் இன்' செய்யும் போது சீருடை வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும்.
  • பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியரிடம் அனுமதி பெற்றுத்தான் விடுப்பு எடுக்க வேண்டும்.
  • பள்ளிக்கு செல்லும் போது அடையாள அட்டை அணிய வேண்டும்.
  • பிறந்த நாள் என்றாலும் மாணவ மாணவியர்கள் பள்ளி சீருடையில் தான் பள்ளிக்கு வரவேண்டும்.
  • மாணவ மாணவியர்களுக்கு பள்ளிக்கு இருச்சக்கர வாகனம், மொபைல் போன் போன்றவற்றை பள்ளிக்கு கொண்டு வர அனுமதி இல்லை.
  • வகுப்பறையில் பாடங்களை கவனமாக கவனிக்க வேண்டும்.
  • ஆசிரியர் பேச்சை மாணவர்கள் கேட்க வேண்டும்.
  • மாணவ மாணவியர்கள் சீருடையில் பள்ளிக்கு வரும்போது கூடுதலாக கலர் டிரஸ் எடுத்து வரக்கூடாது. வகுப்பில் மாணவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
  • அடிக்கடி கை, கால்கள் கழுவ வேண்டும்.
  • மாணவர்கள் எங்கு சென்றாலும் வரிசையாக செல்லவும்.
  • மாணவ மாணவியர்கள் போதை பொருட்களை பயன்படுத்தக்கூடாது மற்றும் எந்தவொரு Tattoo போன்றவற்றுடன் பள்ளிக்கு வர அனுமதி இல்லை .
  • மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு செல்லும் போது அவர்களின் சீருடை சட்டையிலுள்ள பொத்தான்களை கழட்டக்கூடாது.
  • வகுப்பறையில் நோட்டு புத்தகங்களை கிழித்தெறியக் கூடாது.
  • மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போது காப்பு, கம்பல், செயின், கயிறு போன்ற ஆபரணங்கள் ஏதும் அணிய கூடாது.
  • மாணவ மாணவியர்கள் P.T. வகுப்பின்போது பள்ளி வளாகத்துள்ளேயே விளையாட வேண்டும். வெளியே செல்லுதல் கூடாது.
  • ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது மாணவ மாணவியர்கள் வகுப்பறையை விட்டு வெளியில் செல்லக்கூடாது.


தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் சாதிய அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் கைகளில் வண்ண கயிறு அணிவது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மாணவர்களிடையே பிளவு உருவாகி வருகிறது.

சில சமயங்களில் இது மோதலுக்கும் வழிவகுக்கிறது. எனவே, மாணவர்களின் நலன் கருதி இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it