மாணவிகள் இந்த ஜடை போடக்கூடாது.. பள்ளிகள் அதிரடி உத்தரவு..!
மாணவிகள் இந்த ஜடை போடக்கூடாது.. பள்ளிகள் அதிரடி உத்தரவு..!

குதிரை வால் ஜடை போட்டு வரும் மாணவிகளின் கழுத்துப் பகுதி மாணவர்களுக்கு பாலியல் உணர்ச்சியை தூண்டும் என்பதால், பள்ளிக்கு வரும் மாணவிகள் குதிரை வால் ஜடை போடக்கூடாது என ஜப்பானில் உள்ள பள்ளிகள் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து முன்னாள் ஆசிரியர் மோடோகி சுகியாமா கூறுகையில், “நான் எப்போதும் இதுபோன்ற விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறேன்.
ஆனால், இதுபோன்ற விதிகளுக்கு போதுமான எதிர்ப்பு இல்லாததாலும், இது போன்ற விதிகள் சாதாரணமாகி விட்டதாலும் மாணவிகள் அவற்றை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை” என்று தெரிவித்தார்.
இந்தத் தடை, பெண்கள் மீதான ஆண்களின் பார்வையை தவறாக திருப்பும் விதமான பின்னோக்கு சிந்தனை என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது போன்ற வினோதமான விதிகள் ஏற்படுத்தப்படுவது ஜப்பானில் இது முதல் முறை இல்லையென்றாலும் இந்த தடைக்கு அங்கு பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

