Theme Check

காவித்துண்டுக்கு எதிராக நீலத்துண்டு அணிந்த மாணவர்கள்!!

காவித்துண்டுக்கு எதிராக நீலத்துண்டு அணிந்த மாணவர்கள்!!

காவித்துண்டுக்கு எதிராக நீலத்துண்டு அணிந்த மாணவர்கள்!!
X

கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாக பட்டியலின மாணவர்கள் நீலத் துண்டு அணிந்து வந்து வகுப்பில் கலந்து கொண்டனர்.

உடுப்பியில் குண்டாபூர் நகரில் செயல்படும் அரசு பள்ளி ஒன்று மாணவிகள் பர்தா அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என உத்தரவு பிறப்பித்தது. எனினும், மாணவிகள் பர்தா அணிந்தே பள்ளிக்கு வந்தனர். இதையடுத்து அவர்கள் பள்ளி வளாகத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

இதனிடையே, இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்துவருவதற்கு போட்டியாக இந்து மாணவ, மாணவிகளில் ஒருசிலர் காவித் துண்டு அணிந்து கல்லூரிகளுக்கு வரத் தொடங்கினர்.

மாணவர்களின் இந்த உடை விவகாரம் கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், குண்டாபூர் நகரில் உள்ள அரசு பள்ளிக்கு பர்தா அணிந்து வந்த மாணவிகள் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

burkha

எனினும் தனி வகுப்புறையில் அமரவைக்கப்பட்ட அவர்களுக்கு வகுப்புகள் நடைபெறவில்லை. இதேபோல், ஒரு சில கல்லூரிகளுக்கு காவித்துண்டு அணிந்து மாணவர்கள் வந்தனர். இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்துவந்தால் நாங்களும் காவித்துண்டு அணிந்துவருவோம் என அவர்கள் கூறி வருகின்றனர்.

பர்தா விவகாரம் தொடர்பாக இன்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ள நிலையில், இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாக பட்டியலின மாணவர்கள் நீலத் துண்டு அணிந்து கல்லூரிகளுக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

newstm.in

Next Story
Share it