பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.. அரசு அறிவிப்பு !!
பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.. அரசு அறிவிப்பு !!

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந் 20ஆம் தேதி வெளியானது. பொதுத்தேர்வு முடிவுகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட்டார். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள், மேலும் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான் பின் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

12ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் 11ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2 முதல் 10-ம் தேதி வரை நடைபெறும் என்றும் 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2 முதல் 8ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
newstm.in

