Theme Check

பனைத் தொழிலாளர்களுக்கு விரைவில் உதவித் தொகை..?

பனைத் தொழிலாளர்களுக்கு விரைவில் உதவித் தொகை..?

பனைத் தொழிலாளர்களுக்கு விரைவில் உதவித் தொகை..?
X

தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நல வாரிய தலைவராக நியமிக்கப்பட்ட எர்ணாவூர் நாராயணன் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எர்ணாவூர் நாராயணன், “தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரிய தலைவராக முதல்வர் என்னை நேற்று அறிவித்தார். அதற்காக முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன்.

மேலும், பனை தொழிலாளர் வாரியம் 2006-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக இருந்த அரசு, வாரியத்தை கைவிட்ட நிலையில் தற்போது அந்த வாரியம் புதுப்பிக்கப்பட்டு, அதன் தலைவராக முதல்வர் என்னை நியமித்துள்ளார்.

திமுக அரசு பொறுப்பேற்றதும் பனை மரம் வெட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி பெற்றே பனை மரம் வெட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கருப்பட்டியை நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நிவாரண தொகை வழங்குவது போல, பனைத் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்க முதல்வரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். ஏராளமான பனை விதைகள் நடுவதற்கு ஏற்பாடுகள் செய்வோம்” என்று தெரிவித்தார்.

Next Story
Share it