Theme Check

நிலம் வாங்க மானியம்.. அமைச்சர் கயல்விழி அறிவிப்பு..!

நிலம் வாங்க மானியம்.. அமைச்சர் கயல்விழி அறிவிப்பு..!

நிலம் வாங்க மானியம்.. அமைச்சர் கயல்விழி அறிவிப்பு..!
X

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதில், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு துறையின் அமைச்சர் என்.கயல்விழி பேசியதாவது:

“ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லூரி மாணாக்கர் விடுதிகளில் ஆண்டுக்கு 3 முறை மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படும்.

90 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லூரி மாணவியர் விடுதிகளில் ரூ.50 லட்சம் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். ஆதிதிராவிடர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அழிவின் விளிம்பில் உள்ள தோடர், கோத்தர், குறும்பர், இருளர், பணியர் மற்றும் காட்டுநாயக்கன் ஆகிய 6 பண்டைய பழங்குடியினரின் இனவரைவியல் மற்றும் கலாச்சாரங்கள் அழியா வண்ணம் பாதுகாக்க, ஒலி/ஒளி ஆவணமாக ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பதிவு செய்யப்படும்.

நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் 200 பேருக்கு நிலம் வாங்க ரூ.10 கோடி செலவில் மானியம் வழங்கப்படும்.

கடந்த மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட 23 அறிவிப்புகளில் 20 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு, செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Next Story
Share it