விஜயகாந்துக்கு வந்த திடீர் சிக்கல்! தொண்டர்கள் கவலை!!
விஜயகாந்துக்கு வந்த திடீர் சிக்கல்! தொண்டர்கள் கவலை!!

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு வந்துள்ள திடீர் சிக்கலால் அக்கட்சி தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.
விஜயகாந்துக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் இருவரும் கட்சியை நிர்வகித்து வருகின்றனர். ஆனால் விஜயகாந்த்துக்கு கிடைத்தது போன்ற பெரிய வரவேற்பு இவர்களுக்கு கிடைக்கவில்லை.
அதனால் தேமுதிக தொண்டர்களை ஈர்க்க தனது மூத்த மகன் விஜயபிரபாகரனை கட்சிக்குள் கொண்டு வந்தார் பிரேமலதா. அவர் பெரிய தலைவர்களை விமர்சித்து பேசியதால், போதிய அனுபவம் இல்லாமல் தடுமாறி போனார்.
இந்நிலையில் பொருளாதார ரீதியாக தேமுதிக நெருக்கடிக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் விஜய பிரபாகரனுக்கும், மைத்துனர் சுதீஷுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

முக்கியமான சில சொத்துகள் சுதீஷின் கையில் உள்ளதாகவும், அதில் சிலவற்றை விற்று செலவு செய்தால் தேமுதிகவை மீண்டும் பலப்படுத்த முடியும் என விஜயபிரபாகரன் நம்புகிறார். இதில் சுதீஷுக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் பனிப்போர் வெடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையெல்லாம் பார்த்து விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என புரியாமல் குழம்பி தவிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.
newstm.in

