Theme Check

#BREAKING:- அதிமுகவில் திடீர் திருப்பம்.. எடப்பாடி பழனிசாமிக்கு புதிய பதவி..!

#BREAKING:- அதிமுகவில் திடீர் திருப்பம்.. எடப்பாடி பழனிசாமிக்கு புதிய பதவி..!

#BREAKING:- அதிமுகவில் திடீர் திருப்பம்.. எடப்பாடி பழனிசாமிக்கு புதிய பதவி..!
X

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “அதிமுகவில் அனைத்து பதவிகளும் 5 ஆண்டு காலம் தான். ஓபிஎஸ்-சின் ஒருங்கிணைப்பாளர் பதவி, ஈபிஎஸ்-சின் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டது.

ஏற்கனவே திருத்தப்பட்ட சட்டவிதிகளுக்கு நேற்றைய பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால் காலாவதியானது. அதாவது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால் அந்த பதவிகள் கலவாதியாகின.

இந்த பதவிகளுக்கு அதிகாரமளிக்கும் சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவில்லை என்பதால் அதுவும் தற்போது காலாவதி ஆகிவிட்டது.

அதனால், ஓ.பன்னீர்செல்வம் தற்போது ஒருங்கிணைப்பாளர் அல்ல, வெறும் பொருளாளர் மட்டுமே. அதனைப் போல, எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை நிலைய செயலாளராக செயல்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story
Share it