திடீரென 100 அடிக்கு உள்வாங்கிய கடல்! பீதியில் மக்கள்!!
திடீரென 100 அடிக்கு உள்வாங்கிய கடல்! பீதியில் மக்கள்!!

திருச்செந்தூர் கடற்கரையில் சுமார் 100 அடிக்கு கடல் உள்வாங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையோரம் அமைந்துள்ளது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவது வழக்கம். அதன்படி, அமாவாசை நாளில் சுமார் 100 அடிக்கு கடல் உள்வாங்கி, பாசி படிந்த பாறைகள் வெளியே தென்பட்டன.
அலைகளும் சீற்றத்துடன் எழும்பும் நிலையில், அவற்றை பொருட்படுத்தாமல் குடும்பம் குடும்பமாக பக்தர்கள் கடலில் குளித்தனர். சிலர் பாறையின் இடுக்கில் உள்ள சங்கு, சிப்பி போன்ற வித்தியாசமான பொருட்களை எடுத்துச் சென்றனர்.

அமாவாசை என்பதால் கடல் நீர் உள்வாங்கியதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். அமாவாசை மற்றும் பவுர்ணமிக்கு ஓரிரு நாட்கள் முன்பாகவோ அல்லது பின்னரோ திருச்செந்தூர் பகுதியில் கடல் உள்வாங்குவதும், சீற்றத்துடன் முன்னேறுவதும் வாடிக்கையாக நடைபெறும் நிகழ்வாக உள்ளது.
newstm.in

