ரத்தக் கசிவால் அவதி.. சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் இன்று அமெரிக்கா செல்கிறார் !!
ரத்தக் கசிவால் அவதி.. சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் இன்று அமெரிக்கா செல்கிறார் !!

மருத்துவ சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் இன்று அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.
தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்களில் ஒருவர் டி ராஜேந்தர். இயக்குநராக மட்டுமின்றி நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர், இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர் என பல முகங்களை கொண்டுள்ளார். டி ராஜேந்தருக்கு உஷா என்ற மனைவியும் சிலம்பரசன், குறளரசன், இலக்கியா என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மாதம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதை கண்டறிந்தனர். மேலும் வயிற்றுப் பகுதியில் ரத்தக் கசிவு இருப்பது தெரியவந்து, அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று டி.ராஜேந்தரை சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்த நிலையில், வயிற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள ரத்தக் கசிவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை பெறுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனையடுத்து அமெரிக்காவுக்கு அவரை அழைத்துச்செல்வது என குடும்பத்தினர் முடிவு செய்தனர். டி.ராஜேந்தர் மகனான நடிகர் சிம்பு இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டு, இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், டி.ராஜேந்தருக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதற்காக அவர் இன்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். அவரது குடும்பத்தினரும் உடன் செல்கின்றனர்.
newstm.in

