Theme Check

ரயில்வேத் துறையிடம் இருந்து ரூ.35 திரும்பப் பெற 5 வருடம் போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற சுஜீத்!!

ரயில்வேத் துறையிடம் இருந்து ரூ.35 திரும்பப் பெற 5 வருடம் போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற சுஜீத்!!

ரயில்வேத் துறையிடம் இருந்து ரூ.35 திரும்பப் பெற 5 வருடம் போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற சுஜீத்!!
X

கடந்த 2017, ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட மறுநாள், ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை சேர்ந்த 30 வயதான பொறியாளர் சுஜீத் சுவாமி என்பவர் கோட்டாவில் இருந்து புதுடெல்லிக்கு செல்வதற்காக ஏப்ரல் 2017-ல் ‘கோல்டன் டெம்பிள்’ ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். தவிர்க்க முடியாத காரணத்தால் முன்பதிவு செய்திருந்த ரூ.765 தொகை மதிப்புள்ள டிக்கெட்டை ரத்து செய்தார்.

Train

டிக்கெட்டை ரத்து செய்ததை தொடர்ந்து ரூ.65 கழிக்கப்பட்டு, மீதிம் உள்ள 700 ரூபாய்யை அவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக ரூ.100 கழிக்கப்பட்டு, ரூ.665 மட்டுமே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜிஎஸ்டி நடைமுறை அமலுக்கு வருவதற்கு முன்பே, சேவை வரியாக வசூலிக்கப்பட்ட ரூ.35 திரும்பப் பெற அவர் போராடினார்.

இதற்காக அவர் 50 முறை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ரயில்வே துறைக்கும், நிதி அமைச்சகத்துக்கும் விண்ணப்பங்களை தாக்கல் செய்த நிலையில், நான்கு அரசுத் துறைகளுக்கு கடிதங்களை அனுப்பினார்.

ஆர்டிஐ கேள்விக்கு ஐஆர்சிடிசி அளித்த பதில் கடிதத்தில், 2.98 லட்சம் பயனர்கள் ஒவ்வொரு டிக்கெட்டின் மீதும் ரூ.35 வீதம், ஒட்டுமொத்தமாக 2.43 கோடி ரூபாய்யை திரும்பப் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் அவருடைய ஐந்தாண்டு காலப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். மேலும், 3 லட்சம் மக்களுக்கு அவர் உதவி உள்ளார்.

IRCTC

இது குறித்து சுஜீத் சுவாமி கூறும்போது, “இழந்த பணத்தை திரும்பப் தரக் கோரி, ட்விட்டரில் நான் மீண்டும் மீண்டும் ட்வீட் செய்தேன். அதில் பிரதமர், ரயில்வே அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் ஜிஎஸ்டி கவுன்சில் ஆகியோரை டேக் செய்து குறிப்பிட்டு ட்வீட் செய்தேன். அதன் பயனாக தற்போது பணம் திரும்ப கிடைத்தது. எனினும், எனது வங்கிக் கணக்கில் 33 ரூபாய்யைப் பெற்றேன். பாக்கி 2 ரூபாய்யை திரும்பப் பெறுவதற்காக, நான் அடுத்த மூன்று ஆண்டுகள் தொடர்ந்து போராடிய நிலையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பலன் கிடைத்தது. நான் எனது வங்கிக் கணக்கு விவரத்தை ஐஆர்சிடிசிக்கு அனுப்பி, பாக்கி 2 ரூபாய்யை திருப்பி பெற்றேன்" என்றார்.

இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக, கிடைத்த 35 ரூபாயுடன் 500 ரூபாய் சேர்த்து 535 ரூபாய்யை பிரதமர் நலத்திட்டத்திற்கு அனுப்பியுள்ளார்.

Tags:
Next Story
Share it